Tamoul
ஜெப வித்து
அம்ஸ்டர்டாமில் உள்ள அரும் பொருட் காட்சி சாலையில் ஒரு வரலாற்றின் இடைக்காலத்து பொருளை ஒருவர் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்தார். தென்னை, பனை போன்ற புல்லின மரப் பலகையினால் செய்யப்பட்ட உருண்டை, இரண்டாக பகுக்கப்பட்டு இரண்டு பகுதிகளும் மிக நுட்பமான விதத்தில் வெட்டப்பட்டு இருந்தது. அதனுள் எல்லா படங்களும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் சிலுவையில் அறையப்படும் காட்சிகளும் வெகு தெளிவாக காணப்படக்கூடியதாக இருந்தது. இதை சிறிய அலுமாரியைப்போன்ற கீலிலே பொருத்தியிருந்தார்கள். இந்தப் பொருளை ஒரு உருண்டை வடிவான செம்பு பாத்திரத்திற்குள் வைத்து ஒரு சிறிய தோற்ப் பையிற்குள் போடப்பட்டு இருந்தது. சுவிஷேசம் ஒரு வித்திற்குள், பிரயாணம் பண்ணும்போது உங்களோடு இதைக் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது.
சில வருஷங்களுக்கு பின்பு இந்த ஜெப வித்திற்குள் புதிய ஜீவனை ஊதும்படியாக உந்தப்பட்டேன். தற்பொழுது இது தட்டையாகவும் வெறுமையாகவும் இருக்கிறபடியினால் நீங்கள் உங்களுடைய ஜெப குறிப்புகளை பெயர், திகதி, சின்னங்கள், போன்றவைகளைக் கொண்டு எழுதிக்கொள்ளலாம். இந்த ஜெப வித்து சிறியதாகவும் வைத்திருக்கக் கூடியதாகவும் இருக்கிறது. உங்களுடைய ஜெபங்களை எப்பொழுதும் உங்களுடனே கொண்டுசெல்லலாம். உங்களுடைய ஜெபத்திற்குரிய பதில் கிடைத்துவிட்டால் அல்லது குறிப்பிட்ட ஜெபக் குறிப்பை அகற்ற விரும்பினால் புதிய குறிப்புகளுக்கு இடமுண்டாகும்படி மணட்கடதாசியைக் கொண்டு அதை அழிக்கலாம்.
À vérifier encore
Ce texte est en cours de relecture par une personne maîtrisant cette langue.